Share:
Share on Facebook
 Blog
கடந்த 1வார கண்ணோட்டம் (20 – 26 பிப்ரவரி 2012)
March 1st, 2012 by Najib Razak

20 பிப்ரவரி 2012 – தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவட்ராவின் அதிகாரப்பூர்வ வருகை

சமீபத்தில் மலேசியாவிற்கு தனது முதல் வருகையின் போது, பிரதமர் யிங்லக் சினவட்ராவும் நானும்பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தக்கூடிய ஆறு முக்கிய பகுதிகளை கண்டுள்ளோம் – தானியங்கி மற்றும் ரப்பர் தொழிற்சாலை, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, எண்ணெய் & எரிவாயு, மற்றும் சுற்றுலா துறையாகும்.

24 பிப்ரவரி 2012 – மலாக்காவில் ஒரு நாள்

A Day in Melaka
மலாக்காவில் இருந்தபோது, பத்து பெரண்டாம், சுங்கை புத்தாட்டில் உள்ள பொது வீடமைப்பு (PPR) குடி புகுனர்களைச் சந்திக்கவும் வாய்ப்பு கடிதங்கள் வழங்கவும் எனக்கு வாய்ப்பிருந்தது. இந்த RM148,000 அடுக்குமாடி வீடுகள் RM35,000-திற்கு மட்டுமே விற்கப்படும், இதன் மீதித்தொகையை அரசு ஏற்றுக்கொள்ளும்.

மலாக்கா தற்போது அதன் வெற்றிப்புகழை சமாளிப்பதுடன் மலாக்காவில் உள்ள வசதிகளை புகழ் மங்காமல் எவ்வாறு மேம்படுத்துவது எனும் எதிர்கால சவால்களை திட்டமிட்டும் வருகிறது.

25 பிப்ரவரி 2012 – கெடாவில் நடைபயணம்

சீலாட் கலை சங்கம் புசாகா காயோங் மலேசியா (PSSPGM) குருனில் உள்ள ஐக்கியக் கூட்ட புசாகா காயோங் மலேசிய தற்காப்புக் கலை சங்கத்தில் எனக்கு விருது வழங்கினர். மிக முக்கியமாக, அரசு சிலாட்டை பெருமைக்குரிய பாரம்பரியமாக ஊக்குவிக்க உதவும்என நான் அறிவித்தேன்.

பெண்டாங்கில் உள்ள வாட் தீதீ அக்காரில் ஒரு சியாம் பள்ளித் திறந்து வைக்கும் கௌரவம் அளிக்கப்பட்டது. அரசு சியாம் சமூகம் எதிர்கொள்ளக் கூடிய குறைபாடுகளை நிவர்த்திச் செய்யத் தயாராக உள்ளது.

26 பிப்ரவரி 2012 – சிலாங்கூரில் ஒரு நாள்

பாகான் நஹ்கோடா ஒமார் சென்றபோது, 1மலேசியா உள்ளடக்கத் திட்டத்தின்கீழ், நடுத்தர மற்றும் குறைவான வருவாயுடைய மக்களை மறக்கலாகாது என்பதை வலியுறுத்தினேன். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பலவகை அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் BN அரசாங்கத்தின் நேரடி உதவிகள் மூலம் அவர்கள் பயன்பெறுவர்.

Tags: , , , , ,

|
← Go back